திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அம்மன் கோயில் விழாவுக்காக வந்திருந்த இரண்டு குடும்பத்தினர் சிக்கன் ரைஸ், சிக்கன் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு பாதிக்கப்பட்டனர். துரைராஜ், லாரன்ஸ் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நன்றி: நியூஸ்18