கனடா நாட்டில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த நிலையில், கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.