உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் இன்று (அக்., 04) அதிகாலையில் லாரி மீது டிராக்டர் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படோஹி மாவட்டத்தில் கட்டுமானப் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 13 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியது. உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.