கிழக்கு மெக்சிகோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினமான நேற்று (டிச., 25) ஜோன்டெகோமாட்லான் நகரில், மெக்சிகோ நகரத்திலிருந்து சிகோன்டெபெக் கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்தது. நவம்பர் மாத இறுதியில் மேற்கு மாநிலமான மிக்கோவாகனில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.