பேருந்து லாரி கோர விபத்து 10 பேர் பலி.. 30 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாராவில் இன்று (மார்ச் 26) இரவு, நாக்பூர் சாலையில் பூண்டு ஏற்றிச் சென்ற லாரியுடன் பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ஹரேந்திர நாராயண் இதை உறுதிப்படுத்தினார். விபத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 1 குழந்தை உயிரிழந்தனர். பேருந்து முந்திச் சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி