தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த ஆண்டு அதிக நாட்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1-9ஆம் வகுப்புகளுக்கு ஏப்., 24ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். ஆனால் இம்முறை ஏப்ரல் 2வது வாரத்துக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. இதனால் மேலும் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுமுறை கிடைக்கும் என கூறப்படுகிறது.