அனுமன் ஜெயந்தியையொட்டி, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று (டிச., 19) மார்கழி 4ஆம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.