தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளில் முதல் பிறக்கும் குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.