கனமழையால் 1.50 லட்சம் வாழை சேதம்.. விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி இழப்பு

திருநெல்வேலி: வடகிழக்குப் பருவமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி இரவு முதல் விடியவிடிய பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 1.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளும் பருவத்தில் இருந்த இந்த வாழைகள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு சுமார் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி