கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் சாலை பகுதியில் அசைவ ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், பீப் கறி ஆர்டர் செய்துள்ளார். அந்த கறியில் கரப்பான்பூச்சி கிடந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்நபர் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்த நிலையில் சீல் வைத்தனர்.