வேதாரண்யம் - Vedharanyam

மண் குவாரியால் பொதுமக்கள் அவதி.

மண் குவாரியால் பொதுமக்கள் அவதி.

கொத்தமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மண் குவாரியால் பொதுமக்கள் அவதி கொத்தமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மண் குவாரியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் மண் குவாரி அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மண் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மண் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் ஊராட்சியின் முக்கிய சாலைகளின் வழியே செல்வதால் சாலைகள் முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மண் குவாரி அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமான ஆழத்தில் எடுக்கப்பட்டு இருப்பதால் பள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அளவுக்கு அதிகமாக மண் எடுத்தவர்கள் மீதும் சாலையை சேதப்படுத்தியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

வீடியோஸ்