திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 31) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது விரைவில் திருநெல்வேலியில் மிகப்பெரிய வளர்ச்சி வரும் என உறுதியளித்தார். இந்த பேட்டியின்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.