நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை இன்று (டிசம்பர் 17) பார்வையிட்ட நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் இந்த சம்பவம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது என குற்றம் சாட்டியுள்ளார். இந்த பேட்டியின் பொழுது அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.