தென்காசி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் சங்கரன்கோவில், நடுவக்குறிச்சி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று (ஜனவரி 29) தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.