அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சொக்கம்பட்டி என்னும் இடத்தில் ஒரு பெட்டி கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததால், அந்த கடையின் உரிமையாளரான தினேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.