முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு துறை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உள்ளனர். முகாமில் ஸ்கேன், எக்ஸ்ரே, இ. சி. ஜி, ரத்த மாதிரி ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படவுள்ளன.