ஊத்தங்கரை: விசிகவினர் அமைதிப் பேரணி அனுசரிப்பு

56பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் அமைதிப் பேரணி ஊர்வலம் நடைபெற்றது. 

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி கல்லாவி சாலை வழியாக ரவுண்டானா வரையிலும் அமைதிப் பேரணையாக நடந்துவந்து நான்கு முனை சந்திப்பில் உள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சனாதனத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். 

இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், குறிப்பாக பர்கூர் காவேரிப்பட்டினம் போச்சம்பள்ளி மத்தூர் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், திமுக லயோலா ராஜசேகர், தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், துணைச் செயலாளர் தலித் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மதியழகன், சதீஷ், மாதையன், வேலு, திருமுருகன், கோடாரி வளவன், கலை இலக்கிய பேரவை முருகன், சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் அம்பேத்கர், நகர செயலாளர் கோவேந்தன், அன்புவளவன், மாயக்கண்ணன், வீரமணி, சௌந்தர், பட்டாபி நாவை சங்கர், சின்னத்தம்பி, நரசிம்மன், தமிழ்வாணன், பரமசிவம், ஜெயசூர்யா, மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி