ஊத்தங்கரை: டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 6) திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அனைத்து கூட்டணி கட்சி சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, காங்கிரஸ் மாநில செயலாளர் ஜே.எஸ். ஆறுமுகம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குமரேசன், தி.மு.க ஊத்தங்கரை பேரூர் கழக அவைத்தலைவர் தணிகை குமரன், பேரூர் கழக செயலாளர் தீபக், பேரூர் கழக பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காமராஜ், திராவிட கழக முன்னாள் மண்டல செயலாளர் பல பிரபு, ஒன்றிய செயலாளர் சிவராஜ் மற்றும் லிங்கா ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திக், காங்கிரஸ் மத்திய வட்டார தலைவர் திருமால், சொக்கலிங்கம், இளையராஜா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், திராவிட கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி