சாலையோர கம்பி வேலியை உடைத்து முள் காட்டில் பாய்ந்த கார்

5657பார்த்தது
கரூர் அருகே சாலையோர கம்பி வேலியை உடைத்துக்கொண்டு முள் காட்டில் பாய்ந்த காரால் பரபரப்பு.

கரூரிலிருந்து ராயனூர் வழியாக இன்று மதியம் 2 மணி அளவில், சென்ற டிஎன் 57 பி கே 7438 என்ற எண் கொண்ட பலனோ கார், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக செல்லும்போது, திடீரென கார் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பி வேலியை உடைத்து கொண்டு முள் காட்டிற்குள் புகுந்தது.

இந்தக் காரில் இருவர் பயணித்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்குள்ளாக காயம்பட்ட இருவரும் வேறொரு வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் அறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பசுபதிபாளையம் காவல்துறையினர், காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? வாகனத்தில் திடீரென தொழில் நுட்ப குறைபாடு ஏற்பட்டு வாகனம் தடம் மாறி சென்றதா? அல்லது வாகனத்தை ஓட்டியவர்கள் மது போதையில் இருந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி