மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி மேம்பாலம் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்று கூறி கட்டப்பட்ட மேம்பாலம் சில ஆண்டுகளிலேயே போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறி வருகிறது.
சமீபத்தில் இரண்டாம் முறையாக மேம்பாலத்தில் ஓட்டை விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டவுடன் பல நாட்கள் மேம்பாலம் மூடி வைக்கப்பட்டு சேதம் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் கனிம வள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வள கடத்தல் நடந்து வருகிறது. அதுவும் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியே இரவில் கனரக கனிமவள லாரிகள் சிட்டாய் பறந்து வருகிறது. பகலில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை என்று கூறி போக்குவரத்து போலீசாரையும் நிறுத்தி கனிம வள லாரிகள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்ல வைத்து வருகின்றனர். ஆனால் இரவில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் கனிம வளங்களுடன் தங்கு தடை இன்றி சென்று வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.