செங்கல்பட்டு மாவட்டம் லத்துார் ஒன்றியத்தில், 41 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்களுக்கு பயன்பாட்டிற்காக, இரண்டு 'ஜீப்'கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் புதிய ஜீப்கள் வழங்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பழைய ஜீப்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயில் மற்றும் மழையில் வீணாகி வருகின்றன. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பழைய ஜீப்கள் சேதமடைவதற்கு முன் பொது ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.