கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சிறுவாணி சாலையில் நேற்று 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஐந்துமுக்கு சாலை வழியாக ரோட்டை கடக்க முயற்சி செய்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். பொதுமக்கள் பாம்பை கண்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.