விருகம்பாக்கம் - Virugampakkam

சென்னை: வரத்து குறைவு: தேங்காய் கிலோ 60க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவு: தேங்காய் கிலோ 60க்கு விற்பனை

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி என, பல்வேறு மாவட்டங்களில், தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விளையும் தேங்காய்க்கு, பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், தேங்காய் தேவை அதிகரித்து உள்ளது.  தட்டுப்பாடு காரணமாக, அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில், நேற்று ஒரு கிலோ பொள்ளாச்சி தேங்காய் 60 ரூபாய்க்கும், பேராவூரணி தேங்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை