சிவகாசி: ஊரணி மாயம். மீட்டு தர கிராம மக்கள் கோரிக்கை...

76பார்த்தது
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் ஊரணி மாயம். கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட அனுப்பன்குளம் ஊராட்சியில் மாயமான ஊரணியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அனுப்பன்குளம் ஊராட்சியில் ஏராளமான நீர் நிலைகள் தனியாரின் பிடியில் உள்ளன. இந்த ஊராட்சியில். ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து நீர் நிலைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்தப் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆக்கிரமி்ப்பு ஊரணியை மீட்க வேண்டும் என்று அந்த் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தொடர்ந்து கடந்த ஐந்து வருடமாக மாவட்ட நிர்வாகித்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க இல்லை. இந்த நிலையில் அனுப்பன்குளம் ஊராட்சியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையம் அருகில் சுமார் இரண்டு ஏக்கர் அளவில் மிகப்பெரிய ஊரணியை சிலர் டன் கணக்கில் மண் போட்டு மெத்தி சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பருவமழை காலங்களில் சிவகாசியில் இருந்து வரும் வெள்ளநீர் திசை மாறி வயல்வெளி வழியாக வெளியேறி வீணாகின்றது.
அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா கூறும்போது, ஊரணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நான் முயற்சி எடுத்த போது சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் ஊர் ஊருணியை மீட்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you