இராஜபாளையம்: காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம்...

51பார்த்தது
இராஜபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை கைது செய்யக்கோரி இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி. பெண்கள் உள்பட 50 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் 60, இவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இவரது கடைக்கு வாடகை சைக்கிள் எடுக்க வந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கடந்த 9-த்தேதி முதியவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை முதியவர் கைது செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர், வாலிபர் சங்கங்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினம் ஆகியோர் இணைந்து செட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி