சூதாடிய 4 பேரை போலீசார் கைது

68பார்த்தது
சூதாடிய 4 பேரை போலீசார் கைது
விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் பகுதியில், வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் உள்ள புளியந்தோப்பில், அப்பகுதியை சேர்ந்த முத்து, 53; பாலு, 45; சரவணன், 34; அப்பு, 40; ஆகியோர், பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

இவர்களை, வளவனூர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 120 பணம் மற்றும் புள்ளி தாள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி