கட்டை கரும்பில் கூடுதல் லாபம்

53பார்த்தது
கட்டை கரும்பில் கூடுதல் லாபம்
கட்டை கரும்பு சாகுபடியில் கூடுதல் லாபம் பெற கரும்பு விவசாயிகளுக்கு ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு அபிவிருத்தி பிரிவு அறிக்கை: முண்டியம்பாக்கம், செம்மமடு சர்க்கரை ஆலைக்குட்பட்ட கிராமங்களில் தற்போது முன்பட்ட கரும்பு அறுவடை நடக்கிறது. கரும்பு அறுவடை முடிந்து கட்டை கரும்பு சாகுபடியை மேற்கொண்டுள்ள கரும்பு வயல்களில் போதுமான அளவிலான பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதன் மூலம் நடவு கரும்பு போன்றே கட்டை கரும்பில் கூடுதல் மகசூல் பெற முடியும். கரும்பு மகசூலை அதிகரிக்க தோகை பொடியாக்குதல், கங்கு அறுத்தல், கட்டை சீவுதல் போன்ற தொழில் நுட்பங்கள் இருந்தாலும் வயல்களில் போக்கிடங்களை போக்கி பயிர் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியமானதாகும். கரும்பு அறுவடை நடைபெறும் வயல்களில் அரை டன் நுனி கரும்பை வெட்டி பரு கருணைகளாக மேட்டு பாத்தி முறையில் அறுவடை வயல்களில் நடவு செய்ய வேண்டும். நட்ட 20 முதல் 25 நாட்களில் ஒரு பரு கருணைகள் நன்கு துளிர்த்து வளர்ந்து விடும். இவ்வாறு செய்வதால் பிற பகுதியிலிருந்து கரும்பு நாற்று ஏற்றி வரும் செலவு மிச்சமாகிறது. வயல்களில் பிற ரகங்களின் கலப்பு முற்றிலும் தவிர்த்து, நோய் தாக்குதல் குறைவாகிறது. கரும்பு மகசூல் அதிகரித்து லாபம் காண முடியும். கரும்பு விவசாயிகள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டை கரும்பில் கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you