டிவி பார்த்து அதிர்ந்த தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு

72பார்த்தது
டிவி பார்த்து அதிர்ந்த தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(41). காய்கறி வியாபாரியான இவர், மேல்சித்தாமூர் தேமுதிக கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி சென்னைக்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த இவர், தொலைக்காட்சியில் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், விஜயகுமாரை மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் கதறியழுதனர். இச்சம்பவம் தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த விஜயகுமாருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you