திருப்பத்தூர் மாவட்டம ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தொழில் சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (TUPF) சார்பில் குமரி முதல் கோட்டை வரை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் கட்சி சாரா தொழிற்சங்கங்களின் உரிமை மீட்பு புரட்சி பயணம் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி மனு
இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இதில் முக்கிய கோரிக்கைகளாக
Tnuwwb. tn. gov. in என்ற இணையதளம் பங்கு தடை இன்றி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று தனி துறையை உருவாக்கிட வேண்டும்
நலவாரியங்களுக்கு வாரிய தலைவர் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பதிவு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
அமைப்புசாரா 16 நல வாரியத்திற்கும் ஒரு சதவீதம் லிவி வசூல் செய்ய வேண்டும்
நலவாரிய பதிவிற்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி
நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் தங்களது கோரிக்கைகளை ஏற்று கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு பரிந்துரை செய்து தங்களது மனுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.