திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நால்வரோடு பகுதியில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி 4000 கோடியை தமிழ்நாட்டுக்கு தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அப்போது பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி இவ்வாறு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது தமிழக அரசு எளிய மக்கள், எளிய கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நான்கு மாத ஊதியம் மற்றும் 4000 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரில் தெரிவித்தும் நிதி வழங்காத மோடி அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எனவே உடனே மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 4000 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.