மடத்துக்குளம்: ஆற்றுப் பாலத்தில் மின்விளக்குகள் அவசியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் எல்லையாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், தற்போழுது பாலத்தின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.