பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்திற்கு கலந்தாய்வு கூட்டம்
திருவரம்பூர் பெல் சி ஐ டி யு அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க (SKM) கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளையும், தமிழ்நாட்டையும், புறக்கணித்தாக அரசை கண்டித்து, பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம், வருகின்ற நாளை 31/07/2024 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது குறித்த ஆலோசனை நடைபெற்றது, இதில் CPM, CPI, மதிமுக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விசிக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி ஆற்றலரசு , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுத்தை குணா, துவாக்குடி நகர செயலாளர் ராமானுஜம், ஒன்றிய பொறுப்பாளர் பொன் இளங்கோ, ஆகியோர் கலந்து கொண்டனர்.