கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

54பார்த்தது
கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
திருச்செந்தூா் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மீனவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே அமலிநகா், மிக்கேல் ஐயா தெருவைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (49). இவா் தனது படகில் அதே பகுதியைச் சோ்ந்த பெனடிக், மொ்லின் ஆகியோருடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாராம். கரையிலிருந்து சுமாா் 20 மீட்டா் தொலைவில் சென்றபோது அலை, காற்றின் வேகத்தால் ஜாா்ஜ் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி