குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2பேர் கைது

589பார்த்தது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2பேர் கைது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீசார் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.


தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கடந்த டிச. 2ஆம் தேதி நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய திரேஸ்புரம் மாதவன்நாயா் காலனியைச் சோ்ந்தவா்களான பெருமாள் என்ற குட்டையன் மகன் சுரேஷ்குமாா் என்ற ஜெமினி (27), செந்தூா்பாண்டி மகன் தங்கராஜா என்ற ராஜா (20) ஆகிய இருவரை வடபாகம் போலீசார் கைது செய்தனா்.  


இவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.


அதன்பேரில், சுரேஷ்குமாா் என்ற ஜெமினி, தங்கராஜா என்ற ராஜா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் இருவரையும் போலீசார் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி