திருக்காட்டுப்பள்ளி: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

568பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் சரகம், வானராங்குடி கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய இரட்டை மாட்டு வண்டி போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதி இன்றி சிலர் மணல் அள்ளுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீஜா மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் சென்றனர்.

வானராங்குடி கொள்ளிடம் ஆற்றுக்கரையில் எதிரில் வந்த இரட்டை மாட்டு வண்டியே மடக்கி பிடித்தபோது வண்டியை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். வண்டியில் அரசு அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வண்டியை மணலுடன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி