புகையிலை விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்

51பார்த்தது
புகையிலை விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி அண்ணாதுரை, காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா சிலை அருகே உள்ள முகமது சுபயர்(52), தேவராஜன்(52) ஆகிய இருவரின் பெட்டிக்கடைகளிலும் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரண்டு கடைகளுக்கும் சீல் சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி