நீடாமங்கலத்தில் இடிந்து விழுந்த 400 ஆண்டுகள் பழமையான மதில் சுவர்
நீடாமங்கலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மராட்டிய மன்னர் பிரதாமசிம்மர் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை சத்திரம் உள்ளது. இந்த வளாகத்தில் மாணவியர் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மழையால் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர் மழையால் அரண்மனை வளாகத்தில் இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. செங்கற்கள், மணல், சுண்ணாம்புக்கல் போன்ற உடைந்த பாகங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.