செம்பரம்பாக்கம்: ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

68பார்த்தது
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி நீர் வரத்தானது நிரம்பி வருகிறது. இந்த நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது மதகுகள், செட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகில் இருந்த செட்டர்கள் இயக்கி காட்டப்பட்டதையடுத்து அவர் அதனை பார்த்து மதகின் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தார். ஏரியில் தண்ணீரே இல்லை பீதியை கிளப்பி விட்டு விடுகிறார்கள் நவம்பர் மாசம் சர்வநாசம் என்றெல்லாம் சொல்லி விடுகிறார்கள் என அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வருந்தகை ஆகியோரிடம் பேசியபடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வு குறித்து பேட்டி கேட்ட போது தண்ணீரே இல்லை என சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதில் அமைச்சர்கள் தா. மோ. அன்பரசன், நாசர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you