குருத்தானம் மேடு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் குருத்தானம் மேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவானது இன்று நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலானது புதிதாக புனரமைக்கப்பட்டு, கலச பூஜைகளுடன் கலசநீரானது மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கும் கும்பாபிஷேக விழாவானது நடத்தப்பட்டு, பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர்.