நெல்லை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முத்து பலவேசம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். எளிய பின்னணி கொண்ட இவர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டது அவரது உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு முத்து பலவேசத்தின் சொந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பாஜக அலுவலகத்தில் வைத்து முத்து பலவேசத்தை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.