நெல்லை மாநகர பகுதியில் இன்று (ஜனவரி 22) காலை முதல் வெயில் தாக்கம் சுத்தமாக இல்லாமல் இதமான வானிலை நிலவியது. காலை சில இடங்களில் லேசான மழை பெய்தது. பிறகு வானம் இருண்டு சட்டென வானிலை மாறியது. தற்போது மணிமுத்தீஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்கிறது. வானம் இரண்டு உச்சி வேளையில் மாலை பொழுது போல் காட்சி அளிக்கிறது. அவசரத்திற்கு வெளியே வந்த பொதுமக்கள் குடை பிடித்தபடி சாலையை கடந்து சென்றனர்.