தேனி அருகே கோர விபத்து - சிறுவன் உட்பட 3 பேர் பலி

71பார்த்தது
தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள அன்னஞ்சி விளக்கு அருகே தீபன் மில் அருகே சேலத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்தும், கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டெம்போ ட்ராவலரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி