பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா

573பார்த்தது
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், கலந்து கொள்ளும் பாரம்பரிய மிக்க பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தலைக்கவசத்துடன் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. விபத்துகளை தவிர்க்கவும் உயிர் கவசமான ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தியும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பள்ளியில் இருந்து விழிப்புணர்வு பேரணியாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர் சுகன்யா, முன்னாள் மூத்த ஆசிரியர் பன்னீர்செல்வம், முன்னாள் ஆசிரியர்கள், அலுவலர்கள் அமைப்பின் தலைவர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம் எல் ஏ அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியிலிருந்து பஸ் ஸ்டாண்ட், மணிகூண்டு, தலைமை தபால் நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் லயன்ஸ், ரோட்டரி கிளப்கள், நடைபயிற்சி சங்கம், விதைகள் அமைப்பினர், ரயில் பயணிகள் பாதுகாப்பு நல சங்கம் உள்ளிட்ட பல அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி