அம்மாபேட்டையில் மனு கொடுக்கும் போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில்100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வராததை கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக சம்பளம் பாக்கி வழங்க வேண்டியும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலகுரு முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் பக்கிர்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், நம்பிராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட ஒன்றிய குழு தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.