தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருவோணத்தில் அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக விவசாய நலச் சங்க மாவட்டச் செயலர் சின்னதுரையை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
திருவோணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சார்- பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று அங்கு சார் - பதிவாளராகப் பணியாற்றி வரும் சண்முகசுந்தரம் என்பவரிடம் சின்னதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், திருவோணம் போலீஸார் வழக்கு பதிந்து சின்னதுரையை கைது செய்தனர்.