அ. ம. மு. க. நிர்வாகியிடம் ரூ. 16 3/4 லட்சம் பறிமுதல்

65பார்த்தது
அ. ம. மு. க. நிர்வாகியிடம் ரூ. 16 3/4 லட்சம் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டசபை தொகுதி தேர்தல் கூடு தல் பறக்கும்படை அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் வாழப்பாடி புதுபட்டிமாரியம்மன் கோவில் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக அ. ம. மு. க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் மொபட்டில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தியதுடன், அவர் வந்த மொபட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த மொபட்டில் 16 லட்சத்து 86 ஆயிரத்து 690 ரூபாய் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, கடந்த 3 நாட்களாக வங்கி விடுமுறை என்பதால் தனது பெட்ரோல் பங்க்கில் விற்பனை ஆன பணத்தை வங்கியில் செலுத்துவ தற்கு எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால் பணத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அ. ம. மு. க. கிழக்கு மாவட்ட செயலாளரிடம் ரூ. 16% லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி