270 மையங்களில் குரூப்-4 தேர்வை 84 ஆயிரம் பேர் எழுதினர்

71பார்த்தது
270 மையங்களில் குரூப்-4 தேர்வை 84 ஆயிரம் பேர் எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் இந்த தேர்வு நடைபெற்றது. ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை கலெக்டர் பிருந்தாதேவி, நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: -
மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வு எழுத ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 82 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத வசதியாக 270 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை தேர்வு நடைபெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
தேர்வு மையங்களை 5 ஆயிரத்து 310 அறை கண்காணிப்பாளர்கள், 361 தலைமை கண்காணிப்பாளர்கள், 89 நடமாடும் கண்காணிப்புக்குழுவினர், 20 பறக்கும் படையினர், 14 கண்காணிப்புக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வர்கள் முழு சோதனைக்கு பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வை 84 ஆயிரத்து 662 பேர் எழுதினர். 21 ஆயிரத்து 420 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அமைதியாக நடைபெற்றது. அனைத்து தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்று வர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி