மேட்டூர்: மத்திய மந்திரிக்கு சதாசிவம் எம்எல்ஏ மனு

83பார்த்தது
மேட்டூர்: மத்திய மந்திரிக்கு சதாசிவம் எம்எல்ஏ மனு
மேட்டூர் எம். எல். ஏ. சதாசிவம், பா. ம. க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயராசா உள்ளிட்ட பா. ம. க. வினர், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானுக்கு அனுப்பி வைக்கும்படி கலெக்டர் பிருந்தாதேவியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு மறுத்து விட்டது. ஒருங்கிணைந்த கல்வி திட்டப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 401 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. 

இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதை காரணம் காண்பித்து மத்திய அரசு நிதி வழங்க மறுப்பது ஏற்க முடியாது என்பதை பல தருணங்களில் பா. ம. க. உறுதியாக தெரிவித்து உள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. 

மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you