கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க அறிவுரை

51பார்த்தது
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க அறிவுரை
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வெள்ளைக்குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் உள்வரும் வழி, சுத்திகரிப்பு, மற்றும் காற்றோட்டம் நடைபெறும் இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நீரை தெளிவுப்படுத்தும் இடம், திடக்கழிவுகள் சேகரிக்கும் இடம், தெளிந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் செல்லும் பாதை ஆகிய இடங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு குறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறும் போது, ‘சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரை எவ்வித தடையும் இன்றி எளிதாக வெளியேற்றும் வகையிலும், தேவையான நீர் வழிப்பாதைகளை தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.
தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டு நெறிமுறைகள் படி சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயங்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி