சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள 1,102.25 ஏக்கரில் ரூ.564.44 கோடியில் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், டி.எம்.செல்வகணபதி சேலம் மாவட்ட ஆட்சியர், பிருந்தா தேவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.